யு.ஏ.இ.,வில் இருந்து இறக்குமதி அக்டோபரில் 70 சதவீத்ம் உயர்வு
புதுடில்லி:ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து, இந்தியாவுக்கான இறக்குமதி, கடந்த அக்டோபரில் 70 சதவீதம் அதிகரித்து, 60,480 கோடி ரூபாயாக இருந்ததாக, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கொண்ட நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து, கடந்த அக்டோபர் மாதத்தில் இறக்குமதி 70.37 சதவீதம் அதிகரித்து, 60,480 கோடி ரூபாயானது. ஒட்டுமொத்தமாக, ஏப்ரல் - அக்டோபர் இடையேயான காலகட்டத்தில் வர்த்தக பற்றாக்குறை கடந்த ஆண்டைக் காட்டிலும், நடப்பாண்டு அதிகரித்துள்ளது குறித்து, சமீபத்தில் நடந்த இருதரப்பு கூட்டத்தில், இந்தியா கவலை தெரிவித்தது. மேலும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், விதிகள் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு ஐக்கிய அரபு எமிரேட்சை வலியுறுத்தியது. இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 2022 மே மாதம் நடைமுறைக்கு வந்தது. கடந்த 2023-24ல் இரு தரப்பு வர்த்தகம் 7.03 லட்சம் கோடி ரூபாயுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவின் மூன்றாவது வர்த்தக பங்காளியாக உள்ளது.