உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இந்தியா சிமென்ட்ஸ் புதிய சி.இ.ஓ., நியமனம்

இந்தியா சிமென்ட்ஸ் புதிய சி.இ.ஓ., நியமனம்

புதுடில்லி:இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக சுரேஷ் வசந்த் பாட்டீலும்; தலைமை நிதி அதிகாரியாக, கிருஷ்ண கோபால் லட்சாரியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்ததை அடுத்து, இவர்களது நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பொறுப்புகளில் இருந்த என். சீனிவாசன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் விலகியதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்துக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 55.49 சதவீத பங்குகளை, குமார் மங்களம் பிர்லா தலைமையிலான ஆதித்ய பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனம் சமீபத்தில் கையகப்படுத்தியது. இதையடுத்து, கடந்த வாரம் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து சீனிவாசன் விலகினார். அவரோடு சேர்ந்து அவரது மகள், மனைவி மற்றும் நான்கு செயல்சாரா இயக்குனர்களும் விலகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை