உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இந்தியா, இத்தாலி இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு

இந்தியா, இத்தாலி இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு

பிரெஸ்ஸா:தயாரிப்பு, வாகனம், வான்வெளி, எரிசக்தி, இடம்பெயர்வு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க, இந்தியாவும் இத்தாலியும் முடிவு செய்துள்ளன. அரசு முறை பயணமாக இத்தாலி சென்ற மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல், அந்நாட்டின் துணைப் பிரதமர் அன்டோனியோ தஜானியை சந்தித்த போது, இதுதொடர்பாக விவாதித்துள்ளார்.இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவும், இத்தாலியும் வளர்ந்து வரும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளன. இரு நாட்டு அமைச்சர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தியா - இத்தாலி பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணையத்தின் 22வது அமர்வில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. விவசாயம், உணவு பதப்படுத்துதல் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், வாகனம் மற்றும் விண்வெளித் துறைகளில் கூட்டுப் பணிக் குழுக்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பாவுக்கு இடையேயான பொருளாதார வழித்தடம் போன்ற உலகளாவிய இணைப்பு முயற்சிகளில் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.இவ்வாறு தெரிவித்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !