ரூ.70 லட்சம் கோடியை இந்திய ஏற்றுமதி தாண்டும்
பெர்ன்:உலகப் பொருளாதாரம், கடுமையான புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையிலும், உறுதியான வெற்றியாளராக இந்தியா திகழ்கிறது என, மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் நடந்த வர்த்தக பேச்சுக்குப் பின், அவர் கூறியதாவது:நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் 70 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும். ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - ஹமாஸ் போர் மற்றும் செங்கடல் பகுதி நெருக்கடி ஆகியவை நீடிப்பதால், சர்வதேச பொருளாதாரம் நிச்சயமற்ற சூழலில் உள்ளது. எனினும், தெளிவான வெற்றியாளராக இந்தியா தொடர்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.