உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மருந்திலும் கைவைத்த டிரம்ப் இந்தியாவுக்கு பாதிப்பில்லை இந்திய மருந்து கூட்டமைப்பு நம்பிக்கை

மருந்திலும் கைவைத்த டிரம்ப் இந்தியாவுக்கு பாதிப்பில்லை இந்திய மருந்து கூட்டமைப்பு நம்பிக்கை

புதுடில்லி,:அமெரிக்காவில் மருந்துகளின் விலையை கணிசமாக குறைக்கும் அதிபர் டிரம்ப்பின் முடிவால், இந்திய ஜெனரிக் மருந்து தொழில்துறையினர் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என, இந்திய மருந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவில் மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிவித்த டிரம்ப், இதை கட்டுப்படுத்துவதற்கான நிர்வாக உத்தரவில் நேற்று முன்தினம் கையெழுத்திட்டார். அமெரிக்காவின் வரலாற்றிலேயே இதுதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிர்வாக உத்தரவு என்று தெரிவித்த அவர், இதனால் மருந்துகளின் விலை உடனடியாக 80 சதவீதம் வரை குறையும் என்று கூறினார். இதனால், அமெரிக்கர்களின் சுகாதார செலவு கணிசமாக குறையும் என்றும், அமெரிக்க அரசுக்கு பல லட்சம் கோடி டாலர் மிச்சமாகும் என்றும் தெரிவித்த டிரம்ப், அடுத்த 30 நாட்களுக்குள் மருந்து நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை என்றால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். இதுகுறித்து இந்திய மருந்து கூட்டமைப்பின் பொது செயலர் சுதர்சன் ஜெயின் தெரிவித்ததாவது:இந்திய ஜெனரிக் மருந்து நிறுவனங்கள் மிகக் குறைந்த லாபத்திலேயே இயங்குகின்றன. எனவே, டிரம்ப்பின் உத்தரவால் இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. அமெரிக்காவில் டாக்டர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில், ஜெனரிக் மருந்துகளின் பங்கு 90 சதவீதமாக உள்ள நிலையில், அதன் சந்தை மதிப்பு 13 சதவீதமாக மட்டுமே உள்ளது. உத்தரவு எவ்வாறு அமல்படுத்தப்படும் என்பது குறித்த கூடுதல் விபரம் கிடைத்தவுடன் இன்னும் தெளிவு ஏற்படும். இவ்வாறு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை