மேலும் செய்திகள்
அஞ்சல் அலுவலகத்தில் காகிதமில்லா பரிவர்த்தனை
03-Mar-2025
டிஜிட்டல் பரிவர்த்தனை பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்திய தொழில்முறை பணியாளர்களில், பெரும்பாலானோர் பரிசுப்புள்ளி உள்ளிட்ட சலுகைகளை விரும்புவது தெரிய வந்துள்ளது.டிஜிட்டல் பரிவர்த்தனை உள்கட்டமைப்பு சேவையான யு.பி.ஐ., மேடை மூலம் கடன் வழங்கும் கிவி நிறுவனம், டிஜிட்டல் நுகர்வோர் நிறுவனம் யூனோமோருடன் இணைந்து, 21 முதல் 35 வயது கொண்ட இந்திய தொழில்முறை பணியாளர்களிடம் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில், 77 சதவீதம் பேர் நிதி முடிவுகளை மேற்கொள்ளும் முன் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான பரிசுப்புள்ளிகளை ஆய்வு செய்வதாகவும், 50 சதவீதம் பேர் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கேஷ்பேக் சலுகைகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.மேலும் 49 சதவீதம் பேர் பரிவர்த்தனை அளவை மீறி, கேஷ்பேக் சலுகைகளை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளனர். பரிசுப்புள்ளிகளை தவறவிடுவதை நிதி இழப்பாக கருதுவதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர். சிறிய பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பெரும்பாலானோர் யு.பி.ஐ., வசதியை நாடுவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. எனினும், கிரெடிட் கார்டு அளிக்கும் வட்டி இல்லா காலத்தை விரும்புவதாகவும் கணிசமானோர் தெரிவித்துள்ளனர்.
03-Mar-2025