உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தொழில் கடன் வளர்ச்சி குறைந்தது ஆர்.பி.ஐ., அறிக்கையில் தகவல் ஜூன் காலாண்டில் 7.60 சதவீதமாக சரிவு

தொழில் கடன் வளர்ச்சி குறைந்தது ஆர்.பி.ஐ., அறிக்கையில் தகவல் ஜூன் காலாண்டில் 7.60 சதவீதமாக சரிவு

மும்பை:கடந்த ஜூன் காலாண்டில், வங்கிக்கடன் வளர்ச்சி குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், தொழில் கடன் வளர்ச்சி 7.60 சதவீதமாக குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அறிக்கையின் முக்கிய விபரங்கள்:

* நடப்பாண்டு ஜூன் காலாண்டில், வங்கிக் கடன் வளர்ச்சி, 9.90 சதவீதமாக குறைவு; கடந்தாண்டு ஜூன் காலாண்டில், 15 சதவீதமாக இருந்தது* தொழில் கடன் வளர்ச்சியும், 11.30 சதவீதத்திலிருந்து 7.60 சதவீதமாக குறைவு* மொத்த கடனில் தனிநபர் கடன்களின் பங்கு, 32 சதவீதமாக அதிகரிப்பு* வீட்டுக்கடனின் பங்கு, 50 சதவீதத்துக்கும் அதிகம்* தனியார் துறை வங்கிகளைக் காட்டிலும் பொதுத்துறை வங்கிகளின் கடன் வளர்ச்சி அதிகரிப்பு* ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு வழங்கப்பட்ட கடன்களின் வளர்ச்சி அதிகரிப்பு.

டிபாசிட் வளர்ச்சி

*ஜூன் காலாண்டில், 11.30 சதவீதமாக குறைவு* கடந்தாண்டு ஜூன் காலாண்டில், 11.70 சதவீதம்* சேமிப்பு கணக்கு டிபாசிட்கள், 5.40 சதவீதம் வளர்ச்சி* டேர்ம் டிபாசிட்கள், 13.50 சதவீதம் வளர்ச்சி* மொத்த டிபாசிட்களில் குடும்பங்களின் பங்கு, 59.90 சதவீதம்*கடந்தாண்டின் இதே காலாண்டில், 60.80 சதவீதம்* மஹாராஷ்டிரா, டில்லி, கர்நாடகா, உத்தர பிரதேசம், தமிழகம் ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மொத்த டிபாசிட்களில் 54.30 சதவீதம் பங்கு வகிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி