உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 3,852 கைத்தறி ரகங்கள் விற்பனை ஏற்றுமதி கருத்தரங்கில் தகவல்

3,852 கைத்தறி ரகங்கள் விற்பனை ஏற்றுமதி கருத்தரங்கில் தகவல்

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் இருந்து கைத்தறி மூலம், 3,852 ரகங்கள் உற்பத்தி செய்து கோ - ஆப்டெக்ஸ் மற்றும் வெளிச்சந்தை வாயிலாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் கைத்தறி துறை சார்பில், கைத்தறி ரகங்களை ஏற்றுமதிக்கு ஏற்றதாக மாற்றுவது குறித்த கருத்தரங்கம் நடந்தது. அதில் தெரிவிக்கப்பட்டதாவது: ஈரோடு மாவட்டத்தில், 100 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், 50,000 நெசவாளர்கள் நேரடியாக பணியில் ஈடுபடுகின்றனர். மறைமுக வேலைவாய்ப்பில் ஆயிரக்கணக்கானேர் உள்ளனர். சென்னிமலை பெட்ஷீட், பவானி ஜமுக்காளம் போன்றவை உலக பிரசித்தி பெற்றவை. மென்பட்டு சேலைகள், கோரா காட்டன் சேலைகள், கால்மிதிகள், யோகா மேட்கள், துண்டுகள், டஸ்டர் ரகங்கள் அதிகமாக தயாரிக்கப்படுகின்றன. சென்னிமலை பகுதி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தியாகும் சமையலறை உடை, கையுறை, சமையலறை பயன்பாட்டு துண்டு, நாற்காலிக்கு போடப்படும் துண்டுகள் கோ - ஆப்டெக்ஸ் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஈரோடு மாவட்ட பகுதியில் இருந்து, கைத்தறி மூலம், 112 டிசைன்களை வடிவமைத்து, 3,852 ரகங்களாக உற்பத்தி செய்து கோ - ஆப்டெக்ஸ் வெளிச்சந்தை வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை தொழில்நுட்ப ரீதியாக தரமாக உற்பத்தி செய்து ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். அதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ