உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அமெரிக்க, இந்திய அதிகாரிகளின் முதற்கட்ட பேச்சு நிறைவு

அமெரிக்க, இந்திய அதிகாரிகளின் முதற்கட்ட பேச்சு நிறைவு

புதுடில்லி:இந்தியா - அமெரிக்கா இடையேயான இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வதற்கு ஏதுவாக, வரும் வாரங்களில், துறை ரீதியான பேச்சுகள் நடைபெறும் என, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு நாட்டு உயர் அதிகாரிகளுக்கும் இடையே டில்லியில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்த பேச்சுகள் நேற்றுடன் நிறைவுஅடைந்தன. இந்த பேச்சுகளின் போது இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவது, இரு நாடுகளின் சந்தை அணுகலை அதிகரிப்பது, வரி மற்றும் வரி அல்லாத பிற தடைகளை தளர்த்துவது மற்றும் வினியோக தொடர் இணைப்பை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது. வரும் செப்டம்பர் மாதத்துக்கு முன்னதாக, இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதியை இறுதிப்படுத்த இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரமாக முயன்று வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ