வட்டியை குறைக்க வேண்டும்:பொதுமக்களின் பு।ரிதல் அது
வட்டியை குறைக்க வேண்டும்
வங்கிக் கடன் வட்டியை ரிசர்வ் வங்கி நிச்சயம் குறைக்க வேண்டும் என நம்புகிறேன். வட்டி குறைப்பு வாயிலாக, பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். வட்டியை குறைப்பதற்கு, உணவு பணவீக்கத்தை அடிப்படையாகக் கொள்வது தவறான முடிவாகும். எனினும், இந்த கருத்துகள் அரசின் கருத்தல்ல; என் சொந்த கருத்துகள்.பியுஷ் கோயல்மத்திய அமைச்சர், வர்த்தக துறைபொதுமக்களின் பு।ரிதல் அது
மற்ற பணவீக்க குறியீடுகளை விட, உணவு பொருட்கள் விலை அடிப்படையிலேயே, பணவீக்கத்தை பொதுமக்கள் பெரும்பாலானோர் புரிந்து கொள்கின்றனர். எனவே, முக்கிய துறைகளின் பணவீக்கம் குறைவதை, வட்டி குறைப்புக்கான அடிப்படையாகக் கருத முடியாது; கருதக் கூடாது. இது போன்ற சமநிலை பராமரிப்பு காரணமாக, நாட்டின் பொருளாதாரம் பிரச்னைகளை கடந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்கிறது.சக்திகாந்த தாஸ்,கவர்னர், ரிசர்வ் வங்கி