உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / திருப்பூரில் சர்வதேச நிட்பேர் கண்காட்சி

திருப்பூரில் சர்வதேச நிட்பேர் கண்காட்சி

திருப்பூர்:'பசுமை உலகை பின்னுவோம்...' என்ற கருத்தை மைய கருவாக கொண்டு, 52வது 'நிட்பேர்' கண்காட்சி திருப்பூரில் நடக்கவுள்ளது. இந்தியா இன்டர் நேஷனல் நிட்பேர் அசோசியேஷன் (ஐ.கே.எப்.ஏ.,), சார்பில், 2026ம் ஆண்டுக்கான வசந்தகால மற்றும் கோடைகால ஆர்டர்களுக்கான, 'நிட்பேர்' கண்காட்சி, திருப்பூரில், செப்., 17ல் துவங்கி மூன்று நாட்கள் நடக்கவுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் உருவான ஆடைகள், மறுசுழற்சி தொழில்நுட்பத்தில் உருவான ஆடைகள் மற்றும் துணிகள், எதிர்காலத்துக்கான பேஷன்கள், நீடித்த, நிலையான வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி பொருட்கள், இக்கண்காட்சியில் இடம்பெற உள்ளன. கூடுதல் விபரங்களுக்கு, www.globalknitfair.com என்ற இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ