உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சமூக வலைதள செயலி கே.ஒய்.என்., அறிமுகம்

சமூக வலைதள செயலி கே.ஒய்.என்., அறிமுகம்

சென்னை: சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் வகையில், கே.ஒய்.என்., ஹூட் டெக்னாலஜிஸ் நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள, கே.ஒய்.என்., எனப்படும் 'நோ யுவர் நெய்பர்ஹூட்' என்ற சமூக வலைதள செயலியை, தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார். இது குறித்து, கே.ஒய்.என்., டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ., காயத்ரி கூறியதாவது:கே.ஒய்.என்., செயலியானது, தொலைக்காட்சி, செய்தித்தாள் மற்றும் சமூக வலைதளம் என்ற மூன்றின் கலவையாக இருக்கும். சென்னையை முதன்மையாக வைத்து, 14 மண்டலங்களாக பிரித்து களம் இறங்கியுள்ளோம். சிறு, குறு தொழில் முனைவோர், பெண் தொழில் முனைவோர், இல்லத்தரசிகள் உள்ளிட்டோர் தாங்கள் வாழும் பகுதிகளில், தங்களின் பொருட்களை, தயாரிப்புகளை சுலபமாக இந்த செயலியின் வாயிலாக விற்பனை செய்ய முடியும். மேலும், பெரிய நிறுவனங்கள் தங்களை விளம்பரப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும்.மேலும், இச்செயலியில் பயனர்களும் தங்களது பதிவுகளை 'வீடியோ, கிளிப்ஸ்' வடிவங்களில் பதிவிட முடியும். பயனர்களுக்கு சரியான தகவல்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டதாக இந்த செயலி இருக்கும்.தாங்கள் வாழும் பகுதிகளில் நிகழும் நிகழ்வுகளை நேரலையாக காணவும், படிக்கவும் கே.ஒய்.என்., செயலி உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.செயலி அறிமுக விழாவில் சபரீசன், தானி பவுண்டேஷன் நிறுவனர் வீதா தானி, பிரபல டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், விஞ்ஞானி பத்மபூஷன் நம்பி நாராயணன், நடிகர்கள் மாதவன், சித்தார்த் மற்றும் பல பிரபலங்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை