மேலும் செய்திகள்
புதிய பங்கு வெளியீடு
19-Jul-2025
மு ம்பையை தலைமையிடமாக கொண்ட புளுஸ்டோன் பிராண்டு பெயரில், ஆபரணங்கள் தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டு வரும் புளுஸ்டோன் ஜுவல்லரி, 1,540 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட புதிய பங்கு வெளியீடுக்கு வருகிறது. புதிய பங்குகள் விற்பனை வாயிலாக 820 கோடி ரூபாயும்; முதலீட்டாளர்கள் வசமுள்ள 1.39 கோடி பங்குகள் விற்பனை வாயிலாக, 720 கோடி ரூபாயும் திரட்ட திட்டமிட்டு உள்ளது. இதற்காக, பங்கு ஒன்றின் விலை 492 -- 517 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 11 முதல் 13 வரை முதலீட்டாளர்கள் பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். புதிய பங்கு வெளியீடு
5 நிறுவனங்களுக்கு ஒப்புதல்
'பி ரெஸ்டீஜ் ஹாஸ்பிட்டாலிட்டி வெஞ்சர்ஸ், ஆனந்த் ரதி' உள்ளிட்ட 5 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடுக்கு வர, செபி ஒப்புதல் அளித்துள்ளது. ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபட்டுள்ள பிரெஸ்டீஜ் 2,700 கோடி ரூபாயும், பங்கு தரகு வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஆனந்த் ரதி 745 கோடி ரூபாயும் திரட்ட உள்ளன. முன்னணி நிறுவனங்களுக்கு பேக்கிங் தீர்வுகளை அளித்து வரும் 'எஸ்.எஸ்.எப். பிளாஸ்டிக்ஸ்' 550 கோடி ரூபாயும், 'இபேக் ப்ரீபேப் டெக்னாலாஜிஸ்' 300 கோடி ரூபாயும், 'குஜராத் கிட்னி அண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி' 2.2 கோடி பங்குகள் விற்பனை வாயிலாக முதலீட்டையும் திரட்ட திட்டமிட்டு உள்ளன.
19-Jul-2025