மேலும் செய்திகள்
துளிகள்
16-Oct-2025
புதுடில்லி, ஜெர்மனியை சேர்ந்த தைசென்குரூப் நிறுவனத்தின் ஸ்டீல் பிரிவை கையகப்படுத்த, ஜிண்டால் ஸ்டீல் இன்டர்நேஷனல் நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது. தைசென்குரூப் நிறுவனத்தின் ஸ்டீல் பிரிவின் சொத்துகள், இயக்க நடைமுறை, நிதி நிலை உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு மதிப்பிடுவதற்கு, ஜிண்டால் ஸ்டீல் நிறுவன அதிகாரிகள் குழு விரைவில் ஜெர்மனி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில், தைசென்குரூப் ஸ்டீல் ஆலைகளை பார்வையிட்டு, இயந்திரங்கள் குறித்த தொழில்நுட்ப ஆய்வு, வர்த்தக செயல்பாடுகளை ஜிண்டால் ஸ்டீல் குழு ஆராயும் எனத் தெரிகிறது. ஆலையில் தொழிலாளர்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச உள்ள குழுவினர், அவர்களது 30,000 கோடி ரூபாய் ஓய்வூதிய நிதி பொறுப்பை ஏற்பது குறித்தும் தைசென்குரூப் நிர்வாகத்துடன் பேச உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இந்த முயற்சி குறித்து, ஜிண்டால் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலுக்கு பதில் கிடைக்கவில்லை. பெர்லின் நகரில் இருந்து 550 கி.மீ., தொலைவில் தியூஸ்பெர்க் என்ற இடத்தில் உள்ள ஸ்டீல் ஆலையில், ஆண்டுக்கு 1.10 கோடி டன் ஸ்டீல் உற்பத்தி நடைபெறுகிறது.
16-Oct-2025