உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கர்நாடகா பாக்ஸ்கான் ஆலை உற்பத்திக்கு தயார்

கர்நாடகா பாக்ஸ்கான் ஆலை உற்பத்திக்கு தயார்

புதுடில்லி:கர்நாடகாவில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலை, ஐபோன் உற்பத்தியை துவங்க தயாராக உள்ளதாக, அம்மாநில தொழில்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தேவனஹள்ளியில் உள்ள தகவல் தொழில்நுட்ப முதலீட்டு பூங்காவில், தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழிற்சாலை, உற்பத்தியை துவக்க தயாராக உள்ளது. அடுத்த மாதம் முதல், ஐபோன் ஏற்றுமதி இங்கிருந்து துவங்கும். ஜூன் காலாண்டில், அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துஇருந்தார். அதற்கேற்ப ஏற்றுமதிக்கான ஐபோன்கள் இந்த ஆலையில் இருந்து அனுப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை