உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  கரூர் ஜவுளி ஏற்றுமதி ரூ.1,798 கோடி சரிவு அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி

 கரூர் ஜவுளி ஏற்றுமதி ரூ.1,798 கோடி சரிவு அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி

கரூர்: அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால், கடந்த ஆண்டை விட, நடப்பு ஆண்டில் கரூர் ஜவுளி ஏற்றுமதி, 1,798 கோடி ரூபாய் சரிந்துள்ளது. கரூர் மாவட்டத்தில், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், 600க்கும் மேல் உள்ளன. இங்கு திரைச்சீலை, தலையணை உறைகள், மேஜை விரிப்பு, கைக்குட்டை, சோபா விரிப்பு, துண்டு போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. கொசு வலையையும் அதிகளவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாகி வருகிறது. தள்ளுபடி இதுகுறித்து, கரூர் கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் அன்பொழி காளியப்பன் கூறியதாவது: அமெரிக்காவின் 50 சதவீத இறக்குமதி வரி விதிப்புக்கு பின், இங்கிருந்து ஜவுளி வாங்குவதை பெரும்பாலான இறக்குமதியாளர்கள் நிறுத்தி விட்டனர். ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆர்டர்கள் அதிகம் கிடைக்கும். அந்த காலகட்டத்தில் அமெரிக்கா வரி விதித்ததால், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பொருட்கள், வேறு வழியின்றி 25 முதல், 30 சதவீதம் தள்ளுபடியில் ஏற்றுமதி செய்யப்பட்டுஉள்ளன. இதனால், உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை சந்தித்துஉள்ளனர். ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு மாற்றாக பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க, இன்னும் சில காலமாகும். அதுவரை சிறிய அளவிலான உற்பத்தி நிறுவனங்கள் தாக்குப் பிடிக்க வேண்டும். அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால் மட்டுமே, ஏற்றுமதி வர்த்தகம் சரியாமல், ஆடை சந்தையை தக்க வைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். கரூர் ஜவுளி ஏற்றுமதி ஆண்டு தொகை (ரூ/கோடி) 2021 5,536 2022 7,672 2023 6,289 2024 , 6,660 2025 4,862 (-1,798 )


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ