உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்ளும் கேரளாவின் பாரம்பரிய தொழில்கள் நிதியமைச்சர் பாலகோபால் அறிவிப்பு

மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்ளும் கேரளாவின் பாரம்பரிய தொழில்கள் நிதியமைச்சர் பாலகோபால் அறிவிப்பு

திருவனந்தபுரம்:இந்திய பொருட்கள் இறக்குமதி மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக, கேரளாவின் பாரம்பரிய தொழில்களும் அவற்றின் ஏற்றுமதியும் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக, அம்மாநில நிதியமைச்சர் பாலகோபால் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: கேரளாவின் ஏற்றுமதி ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய் முதல் 4,500 கோடி ரூபாய் வரை சரியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் கேரளாவின் பங்கு 13 சதவீதம். வரி விதிப்பால் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்படும். அதிலும் குறிப்பாக இறால் ஏற்றுமதி. மொத்தமாக இந்திய இறால் மீது கிட்டத்தட்ட 33 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்க சந்தையில் இதன் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால். ஆர்டர்கள் ரத்து செய்யப்படுகின்றன. நாட்டின் மசாலா பொருட்கள் ஏற்றுமதியில் கேரளா 80 சதவீதம் பங்கு வகிக்கிறது. இதிலும் அமெரிக்கா முக்கிய சந்தையாக விளங்குவதால், இதன் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. வரி விதிப்புக்கு பின், கேரள ஏற்றுமதியாளர்கள் இப்பிரிவில் ஆர்டர்கள் பெறுவது ஆறு சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். முந்திரி, தேயிலை, ரப்பர், கைத்தறி, தென்னை நார் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதை தவிர்க்க அவசர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை