உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஸோடிஸ், ஜீத்லோ பிராண்டுகளை கையகப்படுத்தியது கோத்தாரி

ஸோடிஸ், ஜீத்லோ பிராண்டுகளை கையகப்படுத்தியது கோத்தாரி

சென்னை:கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேசன் நிறுவனம், 'ஸோடிஸ், ஜீத்லோ' ஆகிய இரண்டு இந்திய காலணி பிராண்டுகளை கையகப்படுத்தியுள்ளது. டி.சி., கோத்தாரி குழுமத்தைச் சேர்ந்த கோத்தாரி நிறுவனம், இந்திய காலணிகள் சந்தையில், விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே, 'கிக்கர்ஸ்' உள்ளிட்ட சில வெளிநாட்டு காலணி பிராண்டுகளுக்கான தயாரிப்பு, வினியோக உரிமையை பெற்றுள்ள இந்நிறுவனம், தமிழகத்தின் பெரம்பலுார் மாவட்டத்தில், தோல் அல்லாத காலணிகள் தயாரிக்க பூங்கா அமைத்துள்ளது. ஸோடிஸ் பிராண்டு, கோவையைச் சேர்ந்த 'சைமஸ் டிரென்ட்ஸ்' நிறுவனத்துக்கு சொந்தமானது. ஜீத்லோ பிராண்டு, ஹரியானாவைச் சேர்ந்த 'ஜீத்லோ டாட் காம் இந்தியா'வை சேர்ந்தது. இந்த இரண்டு பிராண்டுகள் மற்றும் இவற்றின் கீழ் இயங்கும் துணை பிராண்டுகளை கையகப்படுத்தியுள்ளதாகவும், இது இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்நிறுவன செயல் தலைவர் ஜின்னா ரபீக் அகமது தெரிவிக்கையில், “இரண்டு பிராண்டுகளுமே 1,000 ரூபாய்க்கு குறைவான பிரிவில் காலணி விற்பனை செய்து வருகின்றன. இந்திய காலணி சந்தையில் இப்பிரிவு தான் 80 சதவீத சந்தை பங்கு உடையது. 1,000 ரூபாய்க்கு குறைவான காலணி பிரிவின் சந்தை மதிப்பு 80,000 முதல் 85,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை