விருந்தோம்பல் துறையில் கிருஷ்ணா குழுமம்
சென்னை:சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் துறை நிறுவனமான கிருஷ்ணா குழுமம், விருந்தோம்பல் துறையில் கால்பதித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மேரியட் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஷெரட்டன் ஹோட்டல்ஸ் உடன் இணைந்து 'போர் பாயின்ட்ஸ்' என்ற ஹோட்டலை இந்நிறுவனம் அமைத்துள்ளது. சென்னை வேளச்சேரி புறநகர் ரயில் நிலையத்தை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள இந்த ஹோட்டல், அடுத்த வாரம் செயல்பாட்டுக்கு வருகிறது. நகரின் ஐ.டி., வழித்தடத்தில் அமைந்துள்ளது. 150 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல், கடன் ஏதுமின்றி சொந்த நிதி ஆதாரங்களைக் கொண்டே கட்டப்பட்டு உள்ளதாக கிருஷ்ணா குழுமத்தின் இயக்குனர் அஸ்வத் ரெட்டி தெரிவித்துள்ளார்.