உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இந்தியா வரும் லீப் மோட்டார் கார்

இந்தியா வரும் லீப் மோட்டார் கார்

புதுடில்லி:'லீப் மோட்டார்' என்ற மின்சார கார் பிராண்டை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக 'ஸ்டெலாண்டிஸ்' குழுமம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சீனாவைச் சேர்ந்த 'லீப் மோட்டார்' நிறுவனத்தில் கடந்த 2023ல், ஸ்டெலாண்டிஸ் குழுமம், 14,558 கோடி ரூபாய் முதலீடு செய்து, 20 சதவீத பங்கை கையகப்படுத்தியது. படிப்படியாக இந்த பங்கை 51 சதவீதமாக அதிகரித்த இந்நிறுவனம், லீப் மோட்டார் நிர்வாகத்தை தன்வசப்படுத்தியது. அந்நிறுவனம் இந்தியாவில் முதற்கட்டமாக 'சி10', 'டி03' ஆகிய இரு மின்சார கார்கள் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.இந்தியா முழுதும் உள்ள 'ஜீப்' மற்றும் 'சிட்ரான்' விற்பனை மையங்களின் வாயிலாக, இந்நிறுவன மின்சார கார்கள் விற்பனைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

V.Mohan
ஏப் 27, 2025 20:23

எந்த தொழில் முன்னேற்றம் இந்தியாவில் வந்தாலும் முதலில் வயிரெறிவது கருணா பரம்பரை விடியல் விசுவாசிகளுக்குத்தான். முதல்வன் சினிமாவில் ரகுவரன் நக்கலாக சிரித்துக் கொண்டே "" உங்களால என் நினைப்பை தவிர்க்கவே முடியல இல்ல"" என்று அர்ஜூனிடம் சொல்வது நூற்றுக்கு நூறு விடியல் கருணா பரம்பரை திமுகவிற்கு பொருந்துகிறது. வயிற்றெரிச்சலுக்கு ""ஜெலூசில்"" போட்டுக்கோங்க அப்பாவி விசுவாசியே


அப்பாவி
ஏப் 27, 2025 07:45

வாங்க. கதி சக்தி வரவேற்குது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை