உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டிஜிட்டல் இயங்குதளம் அமைக்கஎல்.ஐ.சி.,- இன்போசிஸ் ஒப்பந்தம்

டிஜிட்டல் இயங்குதளம் அமைக்கஎல்.ஐ.சி.,- இன்போசிஸ் ஒப்பந்தம்

புதுடில்லி,:

எல்.ஐ.சி.,- இன்போசிஸ் ஒப்பந்தம்

'இன்போசிஸ்' நிறுவனத்துடன் இணைந்து, அடுத்த தலைமுறைக்கான டிஜிட்டல் இயங்குதளத்தை அமைக்க உள்ளதாக, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அறிவித்துஉள்ளது. இதுகுறித்து, எல்.ஐ.சி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நவீனம், சூழலுக்கேற்ப மாறுபடும் தன்மையுடன் டிஜிட்டல் காப்பீட்டு தீர்வுகளை வழங்கவும்; விற்பனை பிரதிநிதிகள், ஊழியர்களுக்கான இயங்குதளங்களை அமைக்கவும், இன்போசிஸ் நிறுவனத்தை நியமித்து உள்ளது. இந்த ஒப்பந்தம் வாயிலாக, உலகத்தரமான டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் உயர்தரமான சேவைகள் அளிப்பதை எதிர்நோக்கி இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

எல்.ஐ.சி.,- இன்போசிஸ் ஒப்பந்தம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ