உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மஹாராஷ்டிரா நிறுவனம் - என்.எல்.சி., ஒப்பந்தம்

மஹாராஷ்டிரா நிறுவனம் - என்.எல்.சி., ஒப்பந்தம்

நெய்வேலி:என்.எல்.சி., இந்தியா ரினியூவபிள்ஸ் லிமிடெட் -- என்.ஐ.ஆர்.எல், மஹாராஷ்டிராவின் மஹாத்மா புலே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள் கட்டமைப்பு தொழில்நுட்ப லிமிடெட் - மஹாபிரெய்ட் நிறுவனத்துடன் இணைந்து, கூட்டு நிறுவன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.இந்த ஒப்பந்தம் வாயிலாக உருவாகும் கூட்டு நிறுவனம், சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம், என மொத்தம், 2,000 மெகா வாட் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திட்டங்களை உருவாக்கும். இந்த புதிய நிறுவனத்தில் என்.எல்.சி., இந்தியா ரினியூவபிள்ஸ் லிமிடெட் 74 சதவீத பங்குகளையும், மஹாபிரெய்ட் 26 சதவிகித பங்குகளையும் கொண்டிருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ