உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  மூன்று மாவட்டங்களில் மினி டைடல் பார்க்

 மூன்று மாவட்டங்களில் மினி டைடல் பார்க்

சென்னை: திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில், தலா 40 கோடி ரூபாய் செலவில் தரை தளம் மற்றும் மூன்று தளங்களுடன், 'மினி டைடல் பார்க்' கட்டுவதற்கு, 'டைடல் பார்க்' நிறுவனம், 'டெண்டர்' கோரியுள்ளது. சென்னையில் ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பை உருவாக்க, தரமணியில் டைடல் பார்க் கட்டடத்தை, தமிழக அரசு கட்டியது. இதனால், பல இளைஞர்களுக்கு ஐ.டி., துறையில் வேலை கிடைத்தது. எனவே, மாநிலம் முழுதும் ஐ.டி., வேலைவாய்ப்பை விரிவுபடுத்த, சிறிய நகரங்களில், 50,000 - 60,000 சதுர அடியில் மினி டைடல் பார்க் கட்டடங்களை, அரசு அமைத்து வருகிறது. தற்போது, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலா, 40 கோடி ரூபாய் செலவில் டைடல் பார்க் கட்டுவதற்கு, டெண்டர் கோரப்பட்டுள்ளது. இவை மூன்றும் தலா, 60,000 சதுர அடியில் தரை தளம் மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட உள்ளன. இவற்றின் வாயிலாக மொத்தம், 2,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை