உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / துாய தேன் ஏற்றுமதிக்கு குறைந்தபட்ச விலை நீட்டிப்பு

துாய தேன் ஏற்றுமதிக்கு குறைந்தபட்ச விலை நீட்டிப்பு

புதுடில்லி : தேன் மீதான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு தேனின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக, டன்னுக்கு 1.70 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. இது நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், 2025 டிசம்பர் 31ம் தேதி வரை, மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளதாக டி.ஜி.ஆர்.டி., எனப்படும் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் அறிவித்துள்ளது. குறைந்த மதிப்பிலான ஏற்றுமதிகளுக்கும் இது பொருந்தும் என, அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை, இந்திய தேன் ஏற்றுமதிக்கான முக்கிய நாடுகளாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ