உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உலகளவில் 8வது இடம் பிடித்தது மும்பை - டில்லி விமான வழித்தடம்

உலகளவில் 8வது இடம் பிடித்தது மும்பை - டில்லி விமான வழித்தடம்

புதுடில்லி:நடப்பாண்டில் உலகின் எட்டாவது பரபரப்பான உள்நாட்டு விமான பாதையாக மும்பை - டில்லி வழித்தடம் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக, தரஆய்வு நிறுவனமான ஓ.ஏ.ஜி., தெரிவித்துள்ளது. இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமான சந்தையாக உள்ளது. இந்நிலையில், ஓ.ஏ.ஜி., 2024ம் ஆண்டுக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில், உலகளவில் எட்டாவது பரபரப்பான விமான பாதையாக இந்தியாவின் மும்பை - டில்லி வழித்தடம் இடம் பிடித்துள்ளது. மேலும், ஆசியா - பசிபிக் மண்டலத்தில் மும்பை - டில்லி வழித்தடம் ஆறாவது பரபரப்பான தடமாக இடம்பெற்றுள்ளது.இருப்பினும், ஓ.ஏ.ஜி.,யின் பரபரப்பான சர்வதேச விமான பாதைகளுக்காக பட்டியலில், இந்தியாவில் இருந்து செயல்படும் சர்வதேச வழித்தடங்கள் எதுவும் இடம்பெறவில்லை. மும்பை - டில்லி வழித்தடம் அதன் தரவரிசையை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ஒரு இடம் முன்னேறியுள்ளது. மேலும், உலகளவில் இருக்கை திறன் அடிப்படையில் முதல் 10 உள்நாட்டு வழித்தடங்களில் இந்தியாவில் இருந்து வரும் ஒரே உள்நாட்டு வழித்தடமாகவும் இது உள்ளது.இருப்பினும், கடந்த 2019ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றுக்கு முன் இது ஆறாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ