மேலும் செய்திகள்
மெகா உணவு பூங்கா 3 மாநிலங்கள் முன்னிலை
11-Dec-2024
சென்னை:உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டு உள்ள நிறுவனங்களை ஊக்குவிக்கும் திட்டங்களுக்கு தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு, 70 கோடி ரூபாய் நிதி வழங்க, 'நபார்டு' வங்கி ஒப்புதல் அளித்து உள்ளது.தமிழகத்தில் உணவு பதப்படுத்தும் தொழிலில் முதலீடுகளை ஈர்ப்பது, வேளாண் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிப்பது உள்ளிட்ட பணிகளில், டி.என்.எபெக்ஸ் எனப்படும் உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் செயல்படுகிறது. இது, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் இயங்குகிறது. டி.என்.எபெக்ஸ் நிறுவனத்துக்கு, 70 கோடி ரூபாய் கடன் வழங்க, 'நபார்டு' வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதியில், இரு இடங்களில் சிறிய அளவில் உணவு தொழில் பூங்காக்களை அமைத்து குறுந்தொழில்களுக்கு ஒதுக்கீடு, ஆண்டுக்கு, 100 தொழில்முனைவோருக்கு உணவு பதப்படுத்தும் தொழில் தொடர்பாக பயிற்சி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
11-Dec-2024