உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / புதிய தொழில் வாய்ப்புகள்

புதிய தொழில் வாய்ப்புகள்

இந்தத் துறையில் பெரிய மறுசுழற்சி ஆலை அமைப்பது மட்டுமே தொழில் வாய்ப்பு அல்ல. சேகரிப்பு மையங்கள், தரம் பிரிக்கும் நிலையங்கள், பழைய கருவிகளைப் புதுப்பிக்கும் மையங்கள், உதிரிபாக மீட்பு, மின்கலன் மறுசுழற்சி, உலோக மீட்பு, பாதுகாப்பான போக்குவரத்து போன்ற பல துணைத் தொழில்களும் உருவாகின்றன. குறிப்பாக பழைய கைபேசி, கணினி போன்றவற்றை முழுமையாகக் கழிவாகக் கருதாமல், பழுதான பாகங்களை மாற்றி மீண்டும் பயன்படுத்தக்கூடிய கருவியாக மாற்றுவது புதுப்பித்தல் தொழிலுக்கு வாய்ப்பை உருவாக்குகிறது. இந்தியாவில் மறுசுழற்சித் தொழிலுக்கான கட்டமைப்பும் வேகமாக அதிகரித்து வருகிறது. 2019–20-ல் 829 ஆக இருந்த கழிவு மறுசுழற்சி ஆலைகளின் எண்ணிக்கை 2024–25-ல் 3,036 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடுத்த தலைமுறை தொழில் மின்னணுக் கருவிகளின் பயன்பாடு குறையப் போவதில்லை. மாறாக, கைபேசி முதல் மின்சார வாகனம் வரை மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரிக்கும்போது, அவற்றின் ஆயுட்காலம் முடிந்த பிறகு உருவாகும் கழிவும் அதிகரிக்கும். அதனால், மின்னணுக் கழிவு மறுசுழற்சி என்பது எதிர்காலத்தில் தவிர்க்க முடியாத தொழில் துறையாக மாறுகிறது. ஒரு காலத்தில் “பழைய பொருள்” என்று ஒதுக்கப்பட்ட கைபேசியும் கணினியும், இனி “மீண்டும் எடுக்கக்கூடிய மூலப்பொருள்” என்ற பார்வையில் பார்க்கப்படுகின்றன. குப்பை அதிகரிக்கிறது. அதற்குள் இருக்கும் மதிப்பும் அதிகரிக்கிறது. அந்த மதிப்பைத் தொழில்நுட்பத்தால் பிரித்தெடுப்பவர்களுக்கு, இது புதிய தொழில் உலகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ