உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நாட்டின் நிதி வளர்ச்சியை ஊக்குவிக்க புதிய நிதியம்

நாட்டின் நிதி வளர்ச்சியை ஊக்குவிக்க புதிய நிதியம்

புதுடில்லி: இந்தியாவின் நீண்ட கால நிதி வளர்ச்சி, வெளிநாடுகளில் உள்ள பொருளாதார நலன்களை பாதுகாக்க, இந்திய மேம்பாட்டு மற்றும் வியூக நிதியத்தை உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, இந்திய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ., கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது: நாட்டின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், வெளிநாடுகளில் எதிர்கால பொருளாதார நலன்களை பாதுகாக்கவும், நீண்ட கால மூலதனத்தை திரட்டும் வகையிலும், புதிய நிதியம் வடிவமைக்கப்பட வேண்டும். சரியான திட்டமிடல், நிதி திரட்டல் வாயிலாக நிதியமானது, அடுத்த 20 ஆண்டுகளில், அதாவது வரும் 2047ல் கிட்டத்தட்ட 115 முதல் 230 லட்சம் கோடி ரூபாய் வரை மிகப்பெரிய நிதி கையிருப்பை உருவாக்க முடியும். இந்த நிதியத்துக்கு, முதலில் அரசின் சிறிய பட்ஜெட் ஒதுக்கீடு தேவை. மேலும், சாலை, துறைமுகங்கள், ஸ்பெக்ட்ரம் ஆகியவற்றின் வாயிலாக கிடைக்கும் தொகை, பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அரசின் பங்குகளை மாற்றிக்கொள்ளலாம். இது தவிர, பல்வேறு தீமெட்டிக் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டலாம். நாட்டின் பொருளாதாரம் வலுவான பின்னர், அன்னிய செலாவணி கையிருப்பில், சிறிய பகுதியை வெளிநாடுகளில் உள்ள முக்கியத் தாதுக்கள் மற்றும் எரிசக்தி போன்ற நிறுவனங்களைக் கையகப்படுத்த பயன்படுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !