உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜி.எஸ்.டி., வர்த்தகர்களுக்கு எழுத்துப்பூர்வ காரணம் தராமல் வரி ஏய்ப்பு புகாரில் கைது கூடாது புலனாய்வு அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு

ஜி.எஸ்.டி., வர்த்தகர்களுக்கு எழுத்துப்பூர்வ காரணம் தராமல் வரி ஏய்ப்பு புகாரில் கைது கூடாது புலனாய்வு அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு

புதுடில்லி:ஜி.எஸ்.டி., ஏய்ப்பு தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்வதற்கான விதிகளில், மத்திய நேரடி வரிகள் வாரியம் முக்கிய திருத்தம் செய்துள்ளது.மத்திய ஜி.எஸ்.டி., சட்டத்தின்கீழ் ஜி.எஸ்.டி., ஏய்ப்பு, போலி ரசீதுகள் அளிப்பது, வரிவிலக்கை மோசடியாக பெறுவது உள்ளிட்ட குற்றச்செயல்கள் குறித்த புகாரில், ஜி.எஸ்.டி., பதிவு செய்தோரை அதிகாரிகள் கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி., தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டதாக தெரியவரும் நபரை அதிகாரிகள் கைது செய்யும்போது, அதற்கான காரணங்களை ஜி.எஸ்.டி., ஆணையர் பதிவு செய்து கொள்வார். ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு விளக்கம் ஏதும் அளிக்க மாட்டார். இது, வர்த்தகர்களை மிகவும் பாதிப்பதாகக் கூறி டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.ஏற்கனவே, கைது நடவடிக்கையின்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மேற்கோள்காட்டி, கைது செய்யப்படும் நபருக்கு அதற்கான காரணங்களை புலனாய்வு அதிகாரி வழங்க வேண்டுமென டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.அதைத் தொடர்ந்து, ஜி.எஸ்.டி., புலனாய்வு பிரிவின் 4.2.1 விதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 13ம் தேதி அதை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டது.அதன்படி, ஜி.எஸ்.டி., ஏய்ப்பு தொடர்பான குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்படும்போது, அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விளக்க கடிதம் வழங்கப்பட்டு, அதற்கான ஒப்புகையை அதிகாரிகள் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதனால், வெறும் வாய்மொழி குற்றச்சாட்டிலோ, விதிமீறல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கை குறித்த எழுத்துப்பூர்வ கடிதம் அளிக்காமலோ, வர்த்தகர்களை ஜி.எஸ்.டி., புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து துன்புறுத்துவது தடுக்கப்படும் என, தொழில் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.ஒருவரை கைது செய்யும்போது, அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விளக்க கடிதம் வழங்கப்பட்டு, அதற்கான ஒப்புகையை அதிகாரிகள் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி