உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / புதிய இணையதள முகவரி: வங்கிகளுக்கு அக்., வரை கெடு

புதிய இணையதள முகவரி: வங்கிகளுக்கு அக்., வரை கெடு

மும்பை : டிஜிட்டல் பரிவர்த்தனையில் அதிகரித்து வரும் மோசடிகளை தடுக்கும் நடவடிக்கையாக, வங்கிகளுக்கு, 'பேங்க்.இன்' என முடியும் வகையிலான சிறப்பு இணைய முகவரியை அறிமுகப்படுத்துவது குறித்து ஆர்.பி.ஐ., நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துஉள்ளதாவது:வங்கிகள் பெயரில் போலி இணைய தளங்களை வாடிக்கையாளர்கள் எளிதில் அடையாளம் கண்டு தவிர்ப்பதே இதன் நோக்கமாகும். இதற்காக வங்கிகள், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஐ.டி.ஆர்.பி.டி., எனப்படும் வங்கி தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம். புதிய இணையதள முகவரிக்கு விண்ணப்பிப்பது, இடம்பெயர்வது குறித்து ஐ.டி.ஆர்.பி.டி., உரிய வழிகாட்டுதல்களை வழங்கும். அனைத்து வங்கிகளும் அக்.,31ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக பழைய இணையதள முகவரியில் இருந்து புதிய பேங்க். இன் இணைய முகவரிக்கு மாற்ற அறிவுறுத்தப்படுகின்றன. இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளது.மோசடிகளை தடுக்க, வங்கிகள் 'பேங்க்.இன்' என முடியும் வகையில், புதிய இணைய முகவரிக்கு மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !