உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஊதியம் கிடையாது; ரூ.20 லட்சம் தர வேண்டும்! சொமாட்டோ வேலைக்கு புதுமை நிபந்தனை

ஊதியம் கிடையாது; ரூ.20 லட்சம் தர வேண்டும்! சொமாட்டோ வேலைக்கு புதுமை நிபந்தனை

புதுடில்லி:ஓராண்டுக்கு சம்பளம் கிடையாது. மாறாக, 20 லட்சம் ரூபாய் நன்கொடை தர வேண்டும். தேர்வு செய்யப்படுபவருக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்படும் - இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு, கவனத்தை ஈர்த்துள்ளார், 'சொமாட்டோ' நிறுவன தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல்.சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் இடம்பெற்ற விபரம் வருமாறு:'சீப் ஆப் ஸ்டாப்' பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர் வழங்கும் 20 லட்சம் ரூபாய், 'பீடிங் இந்தியா' என்ற பசி தீர்க்கும் தன்னார்வ அமைப்புக்கு நன்கொடையாக வழங்கப்படும். பிறகு, பதவியில் சேர்பவர், சொமாட்டோ வின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தலைமைப் பொறுப்பில் செயல்பட வேண்டும். 'பிளிங்கிட், டிஸ்ட்ரிக்ட், ஹைபர்பியூர்' போன்ற புதிய வர்த்தக வாய்ப்புகளை துவங்க வேண்டும்.சீப் ஆப் ஸ்டாப் பதவியில் சேரும் நபருக்கு, ஓராண்டுக்குப் பின், ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும். முதல் ஓராண்டில் தரப்படாத ஊதியமான 50 லட்சம் ரூபாயை, அவர் பரிந்துரைக்கும் அறக்கட்டளைக்கு சொமாட்டோ நிறுவனம் வழங்கி விடும். வேலைக்கான தகுதியை பொறுத்தவரை, அதிக பொது அறிவுத்திறன், அதிக அனுபவம் ஆகியவை மட்டுமே வேண்டும். பணிசார் வளர்ச்சியைக் காட்டிலும், தனிப்பட்ட வளர்ச்சி தொடர்புடைய இந்தப் பணியில், எம்.பி.ஏ., படிப்பிலும் கிடைக்காத அனுபவக் கல்வியை பெற முடியும். முதல் ஆண்டில் ஊதியம் கிடையாது என்றாலும், அடுத்த ஆண்டு முதல், ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் ஊதியம் பெறலாம். இவ்வாறு தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார்.இவரது இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் பலத்த ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன.நேற்று மாலை 6:00 மணி வரை, மொத்தம் 10,000 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், கெடு முடியும் முன்பே, 18,000 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு விட்டன. அதாவது, ஓராண்டுக்கு ஊதியமின்றி, 20 லட்சம் ரூபாயும் கொடுத்து பணிபுரிய 10,000 பேர் தயாராகி விட்டனர்.

குவிந்த விண்ணப்பங்கள்

நேற்று மாலை 6:00 மணி வரை, மொத்தம் 10,000 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், கெடு முடியும் முன்பே, 18,000 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு விட்டன. அதாவது, ஓராண்டுக்கு ஊதியமின்றி, 20 லட்சம் ரூபாயும் கொடுத்து பணிபுரிய 10,000 பேர் தயாராகி விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை