எண் சொல்லும் செய்தி
20 சதவிகிதம்
கடந்த நிதியாண்டில், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்திய தனியார் துறை நிறுவனங்களின் மூலதன செலவு 20 சதவீதம் உயர்ந்து, 11 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிதி நிறுவனங்கள் இதில் அடங்காது. முந்தைய நிதியாண்டில் செலவினம் 9.10 லட்சம் கோடி ரூபாய். கடந்த நிதியாண்டில் மத்திய அரசு 10.50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மூலதன செலவினத்தை மேற்கொண்டது.