உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சென்னையில் அலுவலக இட வினியோகம் 320 சதவிகிதம் உயர்வு

சென்னையில் அலுவலக இட வினியோகம் 320 சதவிகிதம் உயர்வு

புதுடில்லி: நாட்டின் முக்கிய ஆறு நகரங்களில், கடந்த செப்டம்பர் காலாண்டில், புதிய அலுவலக இடத்திற்கான வினியோகம், ஒட்டுமொத்தமாக 26 சதவீத வளர்ச்சி கண்டுள்ளதாக அமெரிக்க ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான வெஸ்டியன் தெரிவித்துள்ளது. மேலும் தெரிவித்துள்ளதாவது: உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிறுவனங்களின் தேவை அதிகரித்ததன் காரணமாக, புதிய அலுவலக இடங்களுக்கான வினியோகம், சென்னையில் 320 சதவீதம் உயர்ந்து, 21 லட்சம் சதுர அடியாக மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. புனேவில் 164 சதவீதம் அதிகரித்து 37 லட்சம் சதுர அடியாகவும், டில்லி என்.சி.ஆரில் 35 சதவீதம் அதிகரித்து 31 லட்சம் சதுர அடியாகவும், மும்பையில் இரு மடங்கு அதிகரித்து, 18 லட்சம் சதுர அடியாகவும் உள்ளன. நாட்டின் மிகப்பெரிய அலுவலக சந்தையான பெங்களூருவில் புதிய வினியோகம், 6 சதவீதம் குறைந்தும் 34 லட்சம் சதுர அடியாக பதிவாகிஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி