ரூ.1 கோடிக்கு மேல் வீட்டுக்கடன் ஐந்தில் ஒருவர் பெறுகின்றனர் கடந்த நிதியாண்டில் கடன் 10 சதவிகிதம் வளர்ச்சி
புதுடில்லி:பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் கடந்த 2024 - 25ம் நிதியாண்டில், வீட்டுக் கடன் எண்ணிக்கை மற்றும் மதிப்பு ஆகிய இரண்டுமே இரட்டை இலக்க வளர்ச்சியைக் கண்டுள்ளதாக, 'அர்பன் மனி' என்ற நிதி தொழில்நுட்ப தளம் தெரிவித்துள்ளது. பெங்களூரு, குருகிராம், மும்பை, தானே, நவி மும்பை, புனே, ஹைதராபாத், நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய ஒன்பது நகரங்களை உள்ளடக்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. முக்கிய தகவல்கள்:* ஆடம்பர வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது* ஐந்தில் ஒரு வீட்டுக் கடன் பெண்களுக்கு வழங்கப்படுகிறது* ஐந்தில் ஒருவர் ரூ.1 கோடிக்கு மேல் வீட்டுக்கடன் பெற்றார்; அதாவது 21%* 2024-25ல் ஆண்கள் பெற்ற கடன் எண்ணிக்கை 10 சதவீதமும், பெண்கள் கடன் 9 சதவீதமும் அதிகரிப்பு* கடன் தொகையில் ஆண்கள் 14 சதவீதமும்; பெண்கள் 23 சதவீதமும் அதிகரிப்பு* மனையோடு சேர்த்து பெரும் வீட்டுக் கடனின் பங்கு 63 சதவீதமாக அதிகரிப்பு* கடந்த 2018 - 19ம் நிதியாண்டு முதல் சராசரியாக மனை விலை 55 முதல் 60 சதவீதம் உயர்வு* இந்த காலக்கட்டத்தில், வீட்டு மனை பதிவு 77 சதவீதம் அதிகரிப்பு2024-25ல் வீட்டுக் கடன் வளர்ச்சி