உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பருவநிலை மாற்றத்தால் வளர்ச்சிக்கான வாய்ப்பு

பருவநிலை மாற்றத்தால் வளர்ச்சிக்கான வாய்ப்பு

புதுடில்லி,:பருவநிலை சார்ந்த தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக மாறுவதற்கு, பருவநிலை மாற்றம் நல்ல வாய்ப்பை வழங்கி உள்ளதாக, 'நிடி ஆயோக்' அமைப்பின் தலைமை செயல் அதிகாரி சுப்ரமண்யம் தெரிவித்து உள்ளார்.டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அவர் தெரிவித்ததாவது:பருவநிலை சார்ந்த தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக மாறுவதற்கு, பருவநிலை மாற்றம் நல்ல வாய்ப்பை வழங்கி உள்ளது. நம்முடைய பொருளாதாரம், 2030க்குள் எளிதாக, இரு மடங்காகி விடும். 2026- - 27ம் நிதியாண்டுக்குள், பெரும் உத்திகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறுவதே, இந்தியாவின் இலக்கு ஆகும். வரும் 2047ம் ஆண்டில், உலகளவில் மக்கள்தொகை அடிப்படையில், செழிப்புமிக்க நாடாக இந்தியா திகழும். தனிநபர் வருமானம் 15 லட்சம் ரூபாய் முதல் 16.60 லட்சம் ரூபாயாக அதிகரிக்கும். பசுமை பொருளாதாரம் குறித்து அறிந்துக் கொள்வது அவசியம். 2070ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியீட்டை பூஜ்யமாக்கும் இலக்கை எட்ட, தேவையான பாதையை நிடி ஆயோக் உருவாக்கி வருகிறது. இதனை அடைய மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து, குழு ஒன்றை உருவாக்கி உள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை