உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  எனர்ஜி டிரிங்க் என்பதை நீக்க உத்தரவு

 எனர்ஜி டிரிங்க் என்பதை நீக்க உத்தரவு

புதுடில்லி: அதிக அளவு காபின் கொண்ட பெப்சி, ரெட் புல், மான்ஸ்டர் பானங்களின் லேபிள்களில், 'எனர்ஜி டிரிங்க்' என்று பயன்படுத்துவதை நிறுத்துமாறு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தெரிவித்ததாவது: இந்த வகை பானங் களுக்கு இந்தியாவில் தனி தரநிலை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. மேலும், உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் என்பது போன்ற வாசகங்கள் நுகர்வோரை தவறாக வழிநடத்தலாம். இதையடுத்து, தயாரிப்பு லேபிள்களை மாற்ற நிறுவனங்களுக்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குயிக் காமர்ஸ், மற்றும் இ--காமர்ஸ் தளங்களில் 'எனர்ஜி டிரிங்க்' என விளம்பரப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை