| ADDED : செப் 23, 2024 01:53 AM
புதுடில்லி:அமெரிக்காவைச் சேர்ந்த 'ஜி6 ஹாஸ்பிட்டாலிட்டி' உணவக நிறுவனத்தை, கிட்டத்தட்ட 4,400 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக, 'ஓயோ' நிறுவனம் தெரிவித்துள்ளது. 'பிளாக்ஸ்டோன்' நிறுவனத்துடன், முற்றிலும் ரொக்க அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த ஒப்பந்தம், நடப்பாண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜி6 ஹாஸ்பிட்டாலிட்டியின் பிரபலமான, 'மோட்டல் 6, ஸ்டூடியோ 6' பிராண்டுகள் ஓயோவின் கட்டுப்பாட்டின் கீழ் வர உள்ளது. அமெரிக்காவில், ஏற்கனவே 320க்கும் மேற்பட்ட உணவகங்களை நடத்தி வரும் ஓயோ, நடப்பாண்டில் மேலும் 250 உணவகங்களை அதன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர முடிவு செய்துள்ளது.