உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பிரிசம் என பெயரை மாற்றியது ஓயோ

பிரிசம் என பெயரை மாற்றியது ஓயோ

புதுடில்லி:உலகளாவிய விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தன் தாய் நிறுவனமான 'ஓரவல் ஸ்டேஸ்' என்ற பெயரை பிரிசம் என ஓயோ நிறுவனம் மாற்றி உள்ளது. கடந்த 2012ல் ரிதேஷ் அகர்வால் என்பவரால் துவங்கப்பட்ட ஓயோ நிறுவனம், 35க்கும் மேற்பட்ட நாடுகளில், ஆன்லைன் வாயிலாக ஹோட்டல் புக்கிங் சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில், பங்குதாரர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் ரிதேஷ் அகர்வால் தெரிவித்துள்ளதாவது: எங்கள் அனைத்து வணிகங்களும் பிரிசம் என்ற ஒரே குடையின் கீழ் செயல்படும். நிறுவனத்தின் எதிர்கால நோக்கம், விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு, பிரிசம் என பெயரிடப்பட்டுள்ளது. பிரிசம் என்ற பெயர், 6,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற உலகளாவிய பெயர் போட்டி வாயிலாக தேர்வு செய்யப்பட்டது. இவ்வாறு அதில் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை