உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பெட்ரோல், டீசல் விற்பனை நவம்பரில் அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விற்பனை நவம்பரில் அதிகரிப்பு

புதுடில்லி: நவம்பரில் நாட்டின் பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரித்துள்ளதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. பெட்ரோல் விற்பனை, கடந்த ஆண்டு நவம்பரில் 28.6 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில், கடந்த நவம்பரில் 8.30 சதவீதம் அதிகரித்து 31 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. டீசல் விற்பனையும் 5.90 சத வீதம் அதிகரித்து 72 லட்சம் டன்னாக இருந்தது. மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில், கடந்த அக்டோபரில் பெட்ரோல் விற்பனை 29.6 லட்சம் டன்னாக இருந்த நிலையில், நவம்பரில் விற்பனை 4.7 சதவீதம் அதிகரித்துஉள்ளது. டீசல் விற்பனையும் கடந்த அக்டோபரில் 65 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில், நவம்பரில் 11 சதவீதம் விற்பனை அதிகரித்திருந்தது. கடந்த சில மாதங்களாக டீசல் விற்பனை குறைந்திருந்த நிலையில், வளர்ச்சி கண்ட முதல் மாதமாக நவம்பர் மாறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை