உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பி.எப்., உறுப்பினர் எண்ணிக்கை ஜூலையில் 19.90 லட்சம் உயர்வு

பி.எப்., உறுப்பினர் எண்ணிக்கை ஜூலையில் 19.90 லட்சம் உயர்வு

புதுடில்லி: கடந்த ஜூலையில், 10.52 லட்சம் புதிய உறுப்பினர்கள் உட்பட, 20 லட்சம் பணியாளர்கள் பி.எப்., கணக்கு துவங்கியதாக இ.பி.எப்.ஓ., புள்ளி விபரம் தெரிவிக்கிறது. கடந்த ஜூலையில் புதிய பணியமர்த்தல்கள் எண்ணிக்கை 2.50 சதவீதம் அதிகரித்து, புதிய பி.எப்., உறுப்பினர்கள் 10.50 லட்சமாக இருந்ததாகவும், ஏற்கனவே வெளியேறி மீண்டும் இணைந்த உறுப்பினர்களையும் சேர்த்து, 19.90 லட்சமாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 10.50 லட்சம் புதிய உறுப்பினர்களில் 18 முதல் 25 வயதுக்குட்பட்டோர் எண்ணிக்கை 6.25 லட்சமாக சற்று அதிகரித்துள்ளது. புதிய உறுப்பினர்களில் பெண்களின் விகிதம் 29 சதவீதம் அதாவது 3.05 லட்சமாக உள்ளது. நிகர புதிய உறுப்பினர்கள் சேர்ப்பில் 20 சதவீத பங்களிப்புடன் மஹாராஷ்டிரா முன்னணியில் உள்ளது. அதனுடன், கர்நாடகா, தமிழ்நாடு, ஹரியானா மற்றும் குஜராத் ஆகியவை, ஜூலை மாத உறுப்பினர் சேர்க்கையில் கிட்டத்தட்ட 59.30 சதவீத பங்கு வகித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை