உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  அன்னாசி கொள்முதல் விலை உயர்வு

 அன்னாசி கொள்முதல் விலை உயர்வு

எர்ணாகுளம்:அன்னாசி பழத்தின் கொள்முதல் விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கிலோவுக்கு 52 ரூபாயாக உயர்ந்துள்ளதாக பைனாப்பிள் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சங்கம் தெரிவித்து உள்ளதாவது: அன்னாசி விலை கடந்த 10 நாள்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு கிலோ பழத்தின் கொள்முதல் விலை 37 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 50 முதல் 52 ரூபாயாக உயர்ந்து உள்ளது. கேரளாவில் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து வெப்பநிலை அதிகரித்து அன்னாசி விளைச்சல் குறைந்து உள்ளது. அதேபோல் வட மாநிலங்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளால் தேவை அதிகரித்துள்ளது. பிப்., பாதிக்கு மேல் ரம்ஜான் நோன்பு துவங்குவதால் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை