உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரஷ்ய துணை பிரதமருடன் பியுஷ் கோயல் வர்த்தக பேச்சு

ரஷ்ய துணை பிரதமருடன் பியுஷ் கோயல் வர்த்தக பேச்சு

புதுடில்லி:ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி பேட்ருசேவ், மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் டில்லியில் சந்தித்து பேசினர். ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி தலைமையிலான அந்நாட்டின் குழுவினர் இந்தியா வந்துள்ளனர். டில்லியில், அவரை அமைச்சர் பியுஷ் கோயல் சந்தித்து இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். இதுபற்றி சமூகவலை தளத்தில் கோயல் தெரிவித்ததாவது: ரஷ்ய துணை பிரதமர் தலைமையில் வருகை தந்துள்ள குழுவினரை சந்தித்து பேசியது ஆக்கப்பூர்வமாக அமைந்தது. இந்தியா, ரஷ்யா உறவை மேலும் வலிமைப்படுத்த இருதரப்பும் உறுதி கொண்டுள்ளோம். வர்த்தகம், சேவைகள், தொழிற்துறை ஒத்துழைப்பு ஆகியவற்றில் இணைந்து பணியாற்றுவதற்கான புதிய வாய்ப்புகளை ஆராய முடிவு செய்துள்ளோம். இந்தியா, ரஷ்யா இணைந்து இருநாடுகளில் பரஸ்பரம் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை அடையாளம் காண திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை