உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஓராண்டில் 500 ஸ்டார்ட்அப்கள் துவக்குவதை ஊக்குவிக்க திட்டம்

ஓராண்டில் 500 ஸ்டார்ட்அப்கள் துவக்குவதை ஊக்குவிக்க திட்டம்

சென்னை :தமிழகத்தின் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் ஆண்டுக்கு, '500 ஸ்டார்ட்அப்' நிறுவனங்கள் துவக்க, 'வெஞ்சர் பில்டர்' எனப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கும் அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை, தமிழக அரசு துவக்கியுள்ளது. இதற்கு, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. சென்னை, கோவை போன்ற பெருநகரங்கள் மட்டுமின்றி; அனைத்து நகரங்கள், கிராமங்களிலும் தொழில் ஐடியா வைத் து உ ள்ளவர்களை கண்டறிந்து, ஸ்டார்ட்அப் நிறுவனம் துவக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக மாநிலம் முழுதும் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை துவக்க, 'வெஞ்சர் பில்டர்' எனப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கும் அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை, ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் துவக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 20 புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் அமைப்புகள், நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்படும். அவை, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நகரங்களில், தொழில் ஐடியா வைத்துள்ள நபர்களை சந்தித்து, தொழில் துவக்குவது முதல் அதன் வாயிலாக பொருட்களை உற்பத்தி செய்வது வரை உதவிகளை செய்ய வேண்டும். ஒரு வெஞ்சர் பில்டர் நிறுவனம், ஒப்பந்தம் செய்ததில் இருந்து, 12 மாதங்களுக்குள், 25 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துவக்க உதவி செய்ய வேண்டும். இதற்காக ஒரு வெஞ்சர் பில்டர் நிறுவனத்துக்கு 2.50 லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும். இம்முயற்சியின் வாயிலாக ஆண்டுக்கு, 500 ஸ்டார்ட்அப்கள் உருவாக்கப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஸ்டார்ட்அப்களை உருவாக்கும் 'வெஞ்சர் பில்டர்' அமைப்புகளுக்கு ஆதரவளிக்கப்படும்  20 வெஞ்சர் பில்டர் அமைப்புகள் தேர்வு செய்யப்படும்  ஒரு வெஞ்சர் பில்டர் நிறுவனத்துக்கு, 2.50 லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும்  இம்முயற்சியால் ஆண்டுக்கு, 500 ஸ்டார்ட்அப்கள் உருவாக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை