உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  ஜி.டி.பி., வளர்ச்சி கணிப்பு பிரதமர் மோடி வரவேற்பு

 ஜி.டி.பி., வளர்ச்சி கணிப்பு பிரதமர் மோடி வரவேற்பு

புதுடில்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 7.40 சதவீதமாக இருக்கும் என்ற மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் கணிப்புக்கு, பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.40 சதவீதமாக இருக்கும் என, தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் முதற்கட்ட, முன்கூட்டிய மதிப்பீட்டில் தெ ரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தன் 'எக்ஸ்' வலைதள பதிவில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றன. மத்திய அரசின் முதலீட்டு திட்டங்கள் மற்றும் மக்களின் தேவையை ஊக்குவிக்கும் கொள்கைகள் இதற்கு வலுசேர்க்கின்றன. உட்கட்டமைப்பு, உற்பத்திசார் ஊக்கத்தொகை, டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு மற்றும் எளிதாக வணிகம் செய்யும் சூழல் என அனைத்து பிரிவுகளிலும், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை உறுதிப்படுத்துவதாக வளர்ச்சி குறித்த கணிப்பு உள்ளது. பொருளாதார வளர்ச்சி கடந்த நிதியாண்டில் 6.50 சதவீதமாக இருந்தது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை