உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஆகஸ்டில் தனியார் துறை வளர்ச்சி புதிய உச்சம்

ஆகஸ்டில் தனியார் துறை வளர்ச்சி புதிய உச்சம்

புதுடில்லி: நாட்டின் தனியார் துறை, இம்மாதம் வலுவான வளர்ச்சி கண்டுள்ளதாகவும்; இதன் காரணமாக, பிளாஷ் கூட்டு பி.எம்.ஐ., குறியீடு 65.20 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும் எச்.எஸ்.பி.சி., வங்கி தெரிவித்துள்ளது.

பிளாஷ் பி.எம்.ஐ., குறியீட்டின் இம்மாதத்துக்கான தரவுகளில், புதிய ஆர்டர்கள் மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பின் காரணமாக, சேவைகள் துறை வளர்ச்சி, 65.60 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த மாதம் 60.50 புள்ளிகளாக இருந்தது. தயாரிப்பு துறையை பொறுத்தவரை, உள்நாட்டு ஆர்டர்கள் அதிகரிப்பு மற்றும் விற்பனை விலை உயர்வு காரணமாக, சிறிய வளர்ச்சி கண்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தயாரிப்பு துறை பி.எம்.ஐ., கடந்த மாதத்தின் 59.10 புள்ளிகளில் இருந்து, இம்மாதம் 59.80 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இரண்டு துறை நிறுவனங்களுக்கான புதிய ஆர்டர்களும் அதிகரித்தன. ஏற்றுமதி ஆர்டர்களும் புதிய உச்சத்தை எட்டின. ஆசியா, மத்திய கிழக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து அதிகளவிலான ஆர்டர்கள் மேற்கொள்ளப்பட்டன. தயாரிப்பு துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் சற்று குறைந்தபோதிலும், சேவைகள் துறை நிறுவனங்கள் இதை ஈடுசெய்யும் வகையில் அதிகளவிலான பணியாளர்களை பணியமர்த்தின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ