உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பொது வசதி மையங்கள் நான்கு மாவட்டங்களில் துவக்கம்

பொது வசதி மையங்கள் நான்கு மாவட்டங்களில் துவக்கம்

சென்னை:குறுந்தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில், 203 கோடி ரூபாய் செலவில், 43 குறுந்தொழில் குழும பொது வசதி மையங்கள் அமைய உள்ளன. இவற்றில் கடலுார், கோவை உட்பட நான்கு மையங்கள் ஏற்கனவே செயல்படத் துவங்கியுள்ளன.தளவாடங்கள் முதலீட்டில் 1 கோடி ரூபாய்; ஆண்டு வர்த்தகத்தில் 5 கோடி ரூபாய்க்கு கீழே உள்ள நிறுவனங்கள் குறுந்தொழில் பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களால், அதிக மதிப்புள்ள தளவாடங்கள், அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் போன்றவற்றை வாங்க முடிவதில்லை. எனவே, இவை பயன் பெறும் நோக்கில், குறுந்தொழில் குழும மேம்பாட்டு திட்டத்தை, கடந்த 2022 - 23ல் தமிழக அரசு துவக்கியது. இத்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுதும் 43 குறுந்தொழில் குழும பொது வசதி மையங்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு இடத்தில், ஒரே தொழிலில் ஈடுபட்டுள்ள 20 மற்றும் அதற்கு மேற்பட்ட நிறுவனங்களை பயன்படுத்தும் வகையில், நவீன இயந்திரங்களுடன் இந்த பொது வசதி மையம் உருவாக்கப்படுகிறது. இந்த வசதிகளை, குழுமத்தில் இடம்பெறும் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். கோவை பொள்ளாச்சியில் கயிறு குழுமம், ஈரோட்டில் மஞ்சள் குழுமம், சேலம் கொண்டாலம்பட்டியில் பட்டுநுால் குழுமம் என, 43 பொது வசதி மையங்கள், 203 கோடி ரூபாய் செலவில் அமைக்கப் பட்டு வருகின்றன. மொத்த நிதியில், 161 கோடி ரூபாய் தமிழக அரசின் மானியம். மீதி, குழுமத்தில் இடம்பெறும் நிறுவனங்களின் பங்காக இருக்கும். இதுவரை, 20 கோடி ரூபாய் செலவில் கடலுாரில் முந்திரி குழுமம்; கோவையில் அலுமினியம் அச்சுவார்ப்பு குழுமம்; மதுரையில் 'வெப் ஆப்செட் பிரின்டிங்' குழுமம்; செங்கல்பட்டில் புகைப்பட கலைஞர் குழுமம் ஆகியவை செயல்பாட்டிற்கு வந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை