கேள்வி – பதில்
கேள்வி: இயந்திரங்களில் ஏற்படும் பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிந்து, பராமரிப்பு செலவு மற்றும் உற்பத்தி நிறுத்தத்தை எப்படி குறைக்கலாம்? பதில்: இயந்திரங்களை தொடர்ந்து கண்காணித்து, அவற்றின் செயல்பாட்டில் ஏற்படும் சிறிய மாற்றங்களையே ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வேண்டும். செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்மார்ட் விஷன் அமைப்புகள், இயந்திரத்தின் தேய்மானம் அல்லது செயல்திறன் குறைவதற்கான அறிகுறிகளை முன்கூட்டியே கண்டுபிடிக்க உதவும். இதனால் பெரிய கோளாறு ஏற்படும் முன்பே பராமரிப்பு மேற்கொண்டு, திடீர் உற்பத்தி நிறுத்தத்தையும் தேவையற்ற செலவையும் குறைக்க முடியும். சஞ்சய் வாத்வா நிர்வாக இயக்குனர், நாஷ் குழுமம்