உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரெடிமேட் ஆடை ஏற்றுமதி மே மாதத்தில் ரூ.12,876 கோடி

ரெடிமேட் ஆடை ஏற்றுமதி மே மாதத்தில் ரூ.12,876 கோடி

திருப்பூர்,:நம் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, கடந்த மே மாதம் மட்டும், 12,876 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது.இந்தியாவின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி, 16 மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.வளர்ந்த நாடுகளில், பசுமை சார்ந்த உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், வர்த்தகர்களின் பார்வை, நம் நாட்டின் மீது திரும்பியுள்ளது.அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், ஐக்கிய அரபு நாடுகள், இந்தியாவுக்கு அதிக ஆர்டர் கொடுக்க துவங்கிஉள்ளன.இதனால் ஒவ்வொரு மாதமும், ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணை தலைவர் சக்திவேல் கூறுகையில், ''ஆயத்த ஆடை துறையின் நிலையான வளர்ச்சி, ஏற்றுமதியாளர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. ''முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிட்டால், ஏப்., மாதம், 17.40 சதவீதமும்; மே மாதம், 13.80 சதவீத வளர்ச்சியும் கிடைத்துள்ளது. நடப்பாண்டில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி, 50,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்றார்.

ரெடிமேட் ஆடை ஏற்றுமதி

2023-24: 20,1072024-25: 21,3152025-26: 24,610(ஏப்.,- மே மாதங்களில் நிலவரம். ரூபாய் கோடியில்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை