உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / குடிநீர் பாட்டில் விற்பனையில் போட்டி ஏற்படுத்தும் ரிலையன்ஸ்

குடிநீர் பாட்டில் விற்பனையில் போட்டி ஏற்படுத்தும் ரிலையன்ஸ்

மும்பை : நாட்டின் குடிநீர் பாட்டில் விற்பனையில், தனது விலை குறைவான பிராண்ட் வாயிலாக, கணிசமான பங்கை பிடிக்க, அடுத்த மாதத்தில் களம் இறங்குகிறது ரிலையன்ஸ் நிறுவனம். தொலைத்தொடர்பு துறையில் ஜியோ, குளிர்பான சந்தையில் கேம்ப கோலா ஆகியவற்றை களமிறக்க, மற்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டி ஏற்படுத்தி வருகிறது, ரிலையன்ஸ் நிறுவனம். தற்போது கேம்பா சூர் மற்றும் இண்டிபென்டன்ஸ் ஆகிய பெயர்களில் குடிநீர் பாட்டில் விற்பனையில் தடம் பதிக்கிறது. குடிநீர் விற்பனை சந்தையில் பிஸ்லரி, அக்வாபினா, கின்லீ ஆகிய நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் இரண்டு பிராண்டுகளில், இந்த அக்டோபரில் விற்பனைக்கு வரவுள்ள குடிநீர் கடும் போட்டி ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற நிறுவனங்கள் விற்கும் விலையைவிட 20 முதல் 43 சதவீதம் வரை குறைவாக ரிலையன்ஸ் குடிநீர் விற்கவுள்ளது. உதாரணமாக, பிஸ்லரி, அக்வாபினா, கின்லீ குடிநீர் ஒரு லிட்டர் 20 ரூபாய் என்ற நிலையில், கேம் பா சூர், இண்டிபென்டன்ஸ் குடிநீர் 15 ரூபாய்க்கு கிடைக்கும். ஒன்றரை லிட்டர் பாட்டில் 30 முதல் 35 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் குடிநீர் 20க்கும், இரண்டு லிட்டர் 25 ரூபாய்க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, 20,000 கோடி ரூபாயாக உள்ள குடிநீர் விற்பனை சந்தையில் ரிலையன்ஸ் கணிசமான இடத்தை விரைவில் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேம்ப கோலா குளிர்பானத்தை குறைந்த விலையில் அறிமுகம் செய்து, கோககோலா, பெப்சி நிறுவனங்களும் விலையை குறைக்கவும் விளம்பர உத்தியை அதிகரிக்கவும் செய்தது ரிலையன்ஸ். 2023ல் அறிமுகமான கேம்ப கோலா தற்போது சந்தையில் 14 சதவீத இடம் வகிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி