உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / குருணை அரிசி ஏற்றுமதியை அனுமதிக்க கோரிக்கை

குருணை அரிசி ஏற்றுமதியை அனுமதிக்க கோரிக்கை

புதுடில்லி:குருணை அரிசி ஏற்றுமதிக்கான தடையை நீக்குமாறு, அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வகை அரிசியின் இருப்பு, இம்மாத தொடக்கத்தில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதாகவும், எனவே, இதன் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்குமாறும் அந்த சங்கம் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.இந்தியாவில், 100 சதவீத குருணை அரிசியின் ஏற்றுமதிக்கு கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 2023ல் போதுமான பருவமழை இல்லாததால், அரிசி உற்பத்தி பாதிக்கப்படக்கூடும் எனக் கருதி பிற அரிசி வகைகளின் ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், அரசிடம் குருணை அரிசியின் இருப்பு தேவைக்கு அதிகமாகவே இருப்பதாகவும், இதை கருத்தில் கொண்டு மற்ற அரிசி வகைகளின் மீதான தடையை நீக்கியது போல இதன் மீதான தடையையும் நீக்க வேண்டும் என இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கிருஷ்ணா ராவ் வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை